Thursday, April 06, 2006
அரசியல்வாதி
"எனக்கு ஓட்டு போட்டால் உங்களுக்கு நாயா உழைப்பேன்"
தேர்தல் வெற்றிக்கு பின்
"என்னை எதிர்த்தால் உம்பெண்டாட்டி தாலி அறுப்பேன்".
~o~~o~o~~o~o~~o~o~~o~o~~o~o~~o~o~~o~
தேர்தல் வெற்றிக்கு முன் அரசியல்வாதி
"உங்கள் காலை தொட்டு ஓட்டு கேட்கிறேன்"
தேர்தல் வெற்றிக்கு பின் மக்கள்
"உங்கள் காலை தொட்டு உதவி கேட்கிறோம்"
Saturday, February 25, 2006
நியாயவான்கள் சிந்திக்கட்டும்!

நாட்டாண்மை என்ன கேட்கிறார்னா?
த.த.ஜ. செய்வது தவ்ஹீத் பிரச்சாரம் எனும்போது. இவர்களின் நிலைப்பாட்டை சரிகாணாதவர் மூலமாக செய்தி மக்களுக்கு சென்றாலும் தஃவாதானே?
தவ்ஹீது அமைப்புகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், காப்பி ரைட்ஸ் செய்யப்படாத, (கருத்து வேறுபாடுகள் இல்லாத) த.த.ஜ.வின் மார்க்க பயான் கேஸட்டை மற்றவர் காப்பி செய்து விற்பதை தடுக்கும்போது, சத்தியம் போய் மக்களை சேறுவதை ஏன் தடுத்தாய் என்று இறைவன் கேட்க மாட்டானா?
Monday, February 20, 2006
த.த.ஜா-வுக்கென்று தனி ஈமான்?!
குடந்தையில் கணக்கில்லா மக்கள் கூட்டத்தை கண்ட அரசு, கணக்கெடுப்பை துவங்கியது!
ஆம்! முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீடு கோரிக்கை உச்சகட்ட முக்கியத்துவத்தை ததஜவின் குடந்தை பேரணி ஏற்படுத்தியதன் விளைவாக, முதற்கட்டமாக நகராட்சிகளில் பணிபுரிவோரில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் பணியை அரசு துவங்கியுள்ளது.
தமிழக நகராட்சிகளின் நிர்வாகங்களுக்கான ஆனையர் திரு அம்புஜ சர்மா ஐ.ஏ.எஸ் அவர்கள், அனைத்து பிராந்திய நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையின் நகல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த பணியாளர்கள் பற்றிய விபரங்கள் கோரப்பட்டுள்ளது.
கும்பகோணம் த.த.ஜா மாநாட்டிற்கு முன்பாகவே வெளியிடப்பட்ட அரசு சுற்றறிக்கையை இணைத்து 'குடந்தையில் கணக்கில்லா மக்கள் கூட்டத்தை கண்ட அரசு, கணக்கெடுப்பை துவங்கியது' என்று ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியதால், அதனைத்தொடர்ந்து நடந்த மின்னஞ்சல் சண்டையில் வெளியிடப்பட்ட கடிதத்தில் எழுதப்பட்ட வாசகத்தை பாருங்கள்:
..கும்பகோணத்தில் கூடிய எண்ணிலடங்கா மக்கள் வெள்ளம்தான் அன்று சென்னையிலும் தஞ்சையிலும் கூடி அரசியல் கட்சிகளுக்கு திருப்பு முனையாக அமைந்தது அதை எவரும் மறுக்க இயலாது, மறுப்பவர் எவராக இருந்தாலும் உண்மை முஸ்லிமாக மாட்டார்..
அன்புடன்
தநாதஜ தன்னார்வத் தொண்டன்
ஆதம்
குடந்தை
நாட்டாமை என்ன கேட்கிறார்னா..
உண்மை முஸ்லிமாக ஆவதற்கு த.த.ஜா -வுக்கென்று தனி ஈமானின் கொள்கை உள்ளதா? இதை தவறு என்று உணர்ந்தால் இதைப்போல் எழுதுபவர்களை அவ்வியக்கத்தினர் கண்டிப்பார்களா?
Sunday, February 19, 2006
த.மு.மு.க. செய்தது சரியா?
அந்நேரத்தில் அபூ அப்துல்லாஹ் என்ற நடுநிலையாளர் ஒருவர் எழுதியிருந்த கடிதத்தின் ஒரு பகுதியை மட்டும் நம் பஞ்சாயத்துக்கு எடுத்திருக்கிறோம்.
அதேபோல். த.த.ஜ. மாநாட்டிற்கு போட்டியாக அதே தினத்தில் இராமநாதபுரத்திலும், முந்தையத.த.ஜ. கும்பகோண மாநாட்டிற்கு போட்டியாக அதே தினத்தில் இராமநாதபுரத்தில் த.மு.மு.க மாநாடு நடத்தியது பற்றி நாட்டாமை என்ன கேட்கிறார்னா..
தினத்தில் கிளியனூரில் போட்டி இயக்கத்தினர் மாநாடுகள் நடத்துவது குறித்து நடுநிலையாளர்கள் சிலர் குறைகூறுகிறார்கள். நான் கேட்கிறேன்:
போட்டி இயக்கத்தினர் சென்னையில் ஹோட்டல் இம்பீரியலில் மாநாடு நடத்தப் போவதாக 2 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு செயல்பட்ட நிலையில் மாநாட்டு தேதிக்கு சரியாக ஒரு வாரத்திற்கு முன்பு அதே சென்னையில் அதே தினத்தில் மண்ணடியில் இம்ரானா விவகாரமாக நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்கூட்டம் அறிவித்து நடத்தியதே... அது எந்த
வகையில் சரி?
அதேபோல் இளையான்குடியில் அவர்கள் ஒற்றைக் கோரிக்கை மாநாடு அறிவித்து அவர்கள் நடத்தும்போது அதே தினத்தில் இளையான்குடியிலிருந்து 50 கிலோ தொலைவு மட்டுமே உள்ள தேவிப்பட்டினத்தில் பொதுச்செயலாளர் பாக்கரை வைத்து நமது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியதே... அது எந்த வகையில் சரி?
அதேபோல் காரைக்காலில் அவர்கள் மாநாடு அறிவித்து நடத்தியபோது மாநாட்டு தினத்திற்கு ஒருநாள் முன்னதாக மாநிலச் செயலாளர் ஷம்சுல் லுஹாவை வைத்து நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்கூட்டம் நடத்தியதே.. அது எந்த வகையில் சரி?
அவ்வளவு தொலைவு போக வேண்டாம். அவர்கள்(TMMK) கிளியனூரில் நடத்தப் போகும் அதாவது அதே 28-01-2006 அன்று நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் போலீஸாரின்
அறிவுறுத்தலையும் மீறி நடத்தப் போவதாக அறிவிக்கப் பட்டுள்ளதே... மாநாட்டுக்கு முந்தைய தினம் பொதுக்கூட்டம் எதற்கு?
போட்டி இயக்கத்திற்கு மட்டுமல்ல.. JAQH போன்ற இயக்கங்களுக்குப் போட்டியாகவும் நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல கூட்டங்களை நடத்தியுள்ளதே.. அது எந்த வகையில் சரி?
ஆக, இன்று அவர்கள் போட்டி மாநாடு நடத்துகிறார்கள் என்று சொன்னால் அது முன்னோடி நமது தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத் அல்லவா? அவர்களைக் குறைகூறி என்ன பயன்?
- அபூ அப்துல்லாஹ்
ஒரு தரப்பினர் தவறு செய்திருந்தால், அதற்கு பதிலாக எதிர்தரப்பினரும் அந்த தவறை திருப்பி செய்யனுமா?
Saturday, February 18, 2006
இதனால் அறிவிப்பது என்னவென்றால்..
இது கட்டப்பஞ்சாயத்தோ, கெட்ட பஞ்சாயத்தோ அல்ல. மக்கள் பஞ்சாயத்து.
இங்கு நிறுத்தப்படுகிறவர்கள் எல்லா விஷயங்களிலும் கெட்டவர்கள் இல்லை. மற்றவர்கள் எல்லாவற்றிலும் நல்லவர்களும் இல்லை. இங்கு பிரச்னையைப்பற்றிய அறிமுகம் மட்டும் கொடுக்கப்படும். ஆனால் தீர்ப்பு வழங்குவது நீங்கள்தான்.
உங்கள் கருத்தை தாராளமாக இங்கே பதியலாம். ஆனால் தமிழில்தான் இடவேண்டும். நாட்டாமையின் பார்வைக்கு பிறகு கருத்து அனுமதிக்கப்படும்.
நம் பஞ்சாயத்து எந்த இயக்கத்துக்கும் அல்லது யாருக்கும் எதிரானது அல்ல. இயக்கங்கள் இருக்கக்கூடாது என்பது எமது நோக்கமல்ல. அந்த இயக்கங்கள் இஸ்லாத்தின் எதிரிகளை வேரறுக்கு வேண்டுமேயல்லாது தங்களுக்குத் தாங்களே அல்ல.
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்பது முதுமொழி. எனவே, தவறுகளை தட்டி கேட்பது மட்டுமே நாட்டாமையின் வேலை.
இப்படிக்கு
நாட்டாமை